Type Here to Get Search Results !

சித்தேரி மலை கிராமத்தில் 24 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சித்தேரி மலை கிராம பஞ்சாயத்தில் 62 கிராமங்களில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொங்கல் விழாவில் கிரிக்கெட் போட்டி வருடா, வருடம் நடைபெறுவது வழக்கம். சித்தேரில் பிப்ரவரி 1,2 தேதிகளில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை பஞ்சாயத்து தலைவர் கோவிந்தம்மாள்சண்முகம் தலைமையில்,12 வது வார்டு உறுப்பினர் சண்முகம்  முன்னிலையில் போட்டி துவங்கியது.

இரண்டு நாள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்  மண்னூர், சித்தேரி,அழகூர், நலமங்கடை, மாம்பாறை,நொச்சிக்குட்டை, கலசபாடி உள்ளிட்ட மலைகிராமத்தில் இருந்து  24 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதலாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்ற நலமங்காடு அணிக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் இடத்தைப் பிடித்த சித்தேரி அணியினருக்கு ரூ. 3000, மூன்றாவது இடத்தைப் பிடித்த மன்னூர் டீமுக்கு ரூ.2000 என பரிசு தொகை வழங்கி விளையாட்டு வீரர்களை விழாக்குழுவினர் ஊக்கப்படுத்தினர்.

இதுகுறித்து  வெற்றி பெற்ற இளைஞர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறோம். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளோம். தமிழக அரசு மலைவாழ் இன மாணவர்கள் வளர்ச்சி பெற சித்தேரியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்று அமைத்து கொடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies