Type Here to Get Search Results !

பென்னாகரம் பேரூராட்சி 18வது வார்டில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்.

தமிழகத்தில் நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த 26 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி வெளியிடப்பட்டு 28 தேதி முதல் பிப்ரவரி 4 தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.பிப்ரவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையோட்டி  தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலரும்  வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி 18வது வார்டு கோடியூரில் போட்டியிடும் பாமக  வேட்பாளர்  வேட்பு மனு தாக்கல் சுமித்ரா சந்தோஷ் அவர்கள் வேட்புமனு தாக்கல்  செய்தார் அப்போது பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், நிர்வாகிகள் பாட்டாளி இளைஞர் சங்கம் சத்தியமூர்த்தி அருள்மொழி  நீர்குந்தி மாது, நகர செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர் முருகன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies