துவக்கப்பள்ளி அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

துவக்கப்பள்ளி அருகே 10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சுண்டகிரி அருகேயுள்ள தேக்கலப்பள்ளி கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே புதரில் இருந்து ஊர்ந்து சென்ற சுமார் 10 அடி  மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் லாவகமாக பிடித்து பையில் அடைக்கப்பட்டு சூளகிரி பகுதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிதனர்.

தகவலின் பேரில் கிராமத்திற்க்கு விரைந்த வன காப்பாளர்கள் சிவக்குமார் , தினேஷ் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு மீட்டு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேலுமலை காப்புக் காட்டில் விட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad