தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கடந்த 26 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தேதி வெளியிடப்பட்டு 28 தேதி முதல் பிப்ரவரி 4 தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.பிப்ரவரி 19 ம் தேதி தேர்தல் நடைபெறுவதையோட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி 1 வது வார்டு நீர்குந்தியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சின்னப்பொண்ணு கணேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் மாற்று வேட்பாளராக முருகம்மாள் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், நிர்வாகிகள் நீர்குந்திமாது, நகர செயலாளர் ஜீவா,முருகன், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக