Type Here to Get Search Results !

மார்ச் மாதம் 12ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது, இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத் தலைவர் திருமதி திலகம் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதழின்படியும் மார்ச் மாதம் 12ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷனல் லோக் அதாலத்) நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 12-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு , காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள, சமரசம் செய்து கொள்ள கூடிய, மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். 

நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், என தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத் தலைவர் திருமதி .V.திலகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies