Type Here to Get Search Results !

விரிவான தகவல்கள்: 10 பேரூராட்சிகளின் இன்றைய வாக்குப்பதிவு நிலவரம்.

தருமபுரி மாவட்டத்தில்  நடைபெற்ற நகர்ப்புற  தேர்தலில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நடைபெற்றது, இதில் 10 பேரூராட்சிகளில் மொத்தம் 159 வார்டுகளில் பாலக்கோடு பேரூராட்சியில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அந்த 2 வாக்குச்சாவடிகள் நீங்கலாக 157 வார்டுகளுக்கும் என தருமபுரி நகராட்சிமற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்தம் 190 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. இதில் மொத்தம் 801 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இன்று நடைபெற்ற வாக்குபதிவில் ஒவ்வொரு பேரூராட்சியாக பதிவான வாக்குகளை காண்போம்.

1. பி. மல்லாபுரம் பேரூராட்சி.

மொத்தம் 5515 ஆண் வாக்காளர்களும், 5713 பெண் வாக்காளர்கள்  என மொத்தம் 11,228 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 4362 ஆண்களும், 4516 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 8878, இது 79% வாக்குகள் ஆகும்.

2. அரூர் பேரூராட்சி.

மொத்தம் 11,133 ஆண் வாக்காளர்களும், 12,187 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 23,323 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 8202 ஆண்களும், 8588 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 16,796, இது 72% வாக்குகள் ஆகும்.

3. கடத்தூர் பேரூராட்சி.

மொத்தம் 4690 ஆண் வாக்காளர்களும், 4865 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9559 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 3956 ஆண்களும், 4064 பெண்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும்  வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 8021, இது 84% வாக்குகள் ஆகும்.

4. கம்பைநல்லூர் பேரூராட்சி.

மொத்தம் 5345 ஆண் வாக்காளர்களும், 5224 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10,569 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 4456 ஆண்களும், 4322 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 8778, இது 83% வாக்குகள் ஆகும்.

5. காரிமங்கலம் பேரூராட்சி.

மொத்தம் 5457 ஆண் வாக்காளர்களும், 5918 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 11,375 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 4855 ஆண்களும், 5165 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 10,020, இது 88% வாக்குகள் ஆகும்.

6. மாரண்டஹள்ளி பேரூராட்சி.

மொத்தம் 5000 ஆண் வாக்காளர்களும், 5459 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10,459 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 4050 ஆண்களும், 4315 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 8365, இது 80% வாக்குகள் ஆகும்.

7. பாலக்கோடு பேரூராட்சி.

மொத்தம் 7956 ஆண் வாக்காளர்களும், 8206 பெண் வாக்காளர்கள்  என மொத்தம் 16,166 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 6363 ஆண்களும், 6597 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 12,960, இது 80% வாக்குகள் ஆகும்.

8. பாப்பாரப்பட்டி பேரூராட்சி.

மொத்தம் 5253 ஆண் வாக்காளர்களும், 5446 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10,700 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 4451 ஆண்களும், 4630 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 9081, இது 85% வாக்குகள் ஆகும்.

9. பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி.

மொத்தம் 4157 ஆண் வாக்காளர்களும், 4478 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8635 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 3139 ஆண்களும், 3331 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 6470, இது 75% வாக்குகள் ஆகும்.

10. பென்னாகரம் பேரூராட்சி.

மொத்தம் 7353 ஆண் வாக்காளர்களும், 7371 பெண் வாக்காளர்கள்  என மொத்தம் 14,724 வாக்காளர்களில் இன்று வாக்குப்பதிவு செய்தவர்கள் 6097 ஆண்களும், 6107 பெண்களும் வாக்களித்தனர் மொத்தம் பதிவான வாக்குகள் 12,204, இது 83% வாக்குகள் ஆகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies