அரசு மருத்துவமனைக்கு போர்வை, பெட்உறை, தலையனை உறையை வழங்கினார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பெல்ரம்பட்டி அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் போதிய பெட்ஷீட், பெட்கவர், தலையனை உறை இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் கொரோனா காலம் என்பதால் அதிக படுக்கையறை வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளதாலும் நோயாளிகளின் நிலைமையினை கவனித்த முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் அதிமுக கட்சியின் சார்பில் 500 படுக்கைகளுக்கு தேவையான பெட்ஷிட் , பெட்கவர், தலையனை உறை ஆகியவற்றை மருத்துவமனை மருத்துவர்களிடம் வழக்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல். செந்தில்,கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன் மற்றும் கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
.gif)
