இச்சூழல் மண்பாண்ட உற்பத்திக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், வர இருக்கும் தைப்பொங்கல் திருநாள் பயன்பாட்டிற்காக, பொங்கல் பானை தயாரிப்பில் மண்பாண்டத் தொழிலாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர், பொங்கல் பானை உற்பத்தி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இப்பகுதி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூறுகையில், அண்மையில் பெய்த கனமழையால் அருகில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாலும் பானை உற்பத்திக்குத் தேவையான வண்டல் மண் மற்றும் களிமண் போதிய அளவு கிடைக்கப் பெறாத நிலையில் நீண்ட தொலைவு வாகனங்களில் பயணம் செய்து மண்பானை உற்பத்திக்கான மூலப் பொருள்களை கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் பொங்கல் திருவிழாவின்போது பயன்பாட்டிற்கு வரும் மண்பாண்டங்களின் விலை சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகக் குறைவாகவே விற்பனை உள்ளது அதேபோல விற்பனை விலையும் மிகவும் குறைவாகவே உள்ளது மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் இன்னும் குறைவான கால அவகாசமே உள்ள நிலையில் இப்பகுதியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி கடந்த ஆண்டைவிட சற்று குறைவாகவே இருக்கும் விற்பனையும் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர் இப்பகுதி மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறினர்.
.gif)
