Type Here to Get Search Results !

வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்பு, பிறப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம்.

தமிழகத்தில்  இறப்பு, பிறப்பு சான்றிதழ் வேண்டி மனு அளித்து நீண்ட நாள் நிலுவையில் உள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஏராளமான மனுக்கள் குவிந்தன.

இதையடுத்து ஒவ்வொரு தாலுகா அளவில் இறப்பு, பிறப்பு சான்றிதழ் குறித்து சிறப்பு முகாம் நடத்தி மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்ரவிட்டதை தொடர்ந்து தர்மபுரி பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்மபுரி மாவட்ட சார் ஆட்சியர் சித்ரா விஜயன் தலைமையில் இறப்பு, பிறப்பு சான்று வழங்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. 

இம்முகாமில் நேர்முக உதவியாளர் இளஞ்செழியன், தாசில்தார் (பொ) ரேவதி, துனைதாசில்தார்கள் சத்யபிரியா, துரை வேல், வருவாய் ஆய்வாளர்கள் முருகன், செந்தில்குமார், தாரணி, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies