தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு காமராஜர், திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் கே.கணேசன், மேற்கு வட்டார தலைவர் எம்.ஆர். வஜ்ஜிரம், மாவட்ட துணை தலைவர்கள் ஆர்ஐ.வேடியப்பன், பி.டி.ஆறுமுகம் ஓபிசி மாவட்ட தலைவர் ஜே.நவின், மாவட்ட செயலாளர்கள் கே.ஆர்.சிவலிங்கம் டி.வேடியப்பன்.
வர்த்தகபிரிவு மாவட்ட தலைவர் வி.மோகன்,பட்டதாரி பிரிவு தலைவர் ஆர்.விக்ரம் ஐஎன்டியூசி தலைவர் காந்தி மாவட்ட பொதுச்செயலாளர் கக்கன்ஜி நிர்வாகிகள் முருகேசன், தக்காளிபெருமாள் செல்வகுமார் மார்க்ஸ் குமார் தருமன் சதாசிவம் குப்பன் டேவிட் லட்சுமணன் பெரியக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.gif)
