Type Here to Get Search Results !

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற தேவாதி அம்மன் திருவிழா.

தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்தில் 24-மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர்  சுமார் 2000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அனைத்து குடும்பங்களும்  ஒன்று சேர்ந்து வருடந்தோறும் தை மாதத்தில் நடைபெறும் தேவாதி அம்மன் திருவிழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வது வழக்கம்.

இன்று அதிகாலை அரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு பின்புறம் பச்சை ஓலையில் பந்தலிட்டு  அலங்கரிக்கப்பட்ட தேவாதி அம்மனுக்கு கரகம் எடுத்து நடைபெற்ற பூஜையில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். பக்தர்கள் அம்மனுக்கு  நேர்த்திக்கடனாக விட்ட சுமார் 25  ஆடுகளை வெட்டி சமையல் செய்து அம்மனுக்கு படையலிட்டு பின்னர் அனைத்து குடும்பங்களுக்கும் பிரசாதமாக  கறி குழம்பு, தேங்காய்,பொரி, வாழை பழம்,பலியிட்ட ஆட்டின் ரத்தம் பிரசாதமாக வழங்கப்பட்டன.

பிறகு 500 ஆடுகளை வெட்டப்பட்டு அந்தக் கறியை  அனைத்து  குடும்பங்களுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்தனர். அந்தக் கறியை பக்கத்தில் உள்ள வீட்டுக்குக் கூடக் கொடுக்காமல் அவர்கள் குடும்பத்தினர் மட்டும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதுபோன்று செய்வதால் அவர்களது தொழில்  வளர்ச்சி பெற்றும், குடும்பம் முன்னேறும் என்பது அவர்களது நம்பிக்கை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies