Type Here to Get Search Results !

எருது ஓட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் மறுப்பு.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, லளிகம், நார்த்தம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதி பொதுமக்கள் எருது ஓட்ட அனுமதி கேட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் போலீசார் எருது ஓட்டுவதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தனர்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையான கரிநாள் அன்று எருது ஓட்டுவது வழக்கம், தற்போது கொரோனா கட்டுபாடுகளால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்த பொங்கல் பண்டிகையில் மாடு ஓட்டம், எருது ஓட்டம் மற்றும் திருவிழாக்களுக்கு தடை விதித்தது.

இந்த நிலையில் நல்லம்பள்ளியை சுற்றியுள்ள கிராம பகுதி பொதுமக்கள் இன்று ஒருநாள் மட்டும் பொங்கலை கொண்டாடி மகிழும் வகையில் எருது ஓட்டுவதற்காவது அனுமதி வழங்க வேண்டும் என கேட்டு அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies