Type Here to Get Search Results !

முயல் விடும் பாரம்பரிய திருவிழா பத்திரிக்கையாளர்களை புறக்கணித்த பொதுமக்கள்.

தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகா, அச்சல்வாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட  குடுமியாம்பட்டி  கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கரிநாளுக்கு அடுத்த நாள் முயல் விடும் பாரம்பரிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.

குடுமியாம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்  வழிபாடு நடைபெற்ற பிறகு 150-க்கும் மேற்பட்டோர்  அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று  வலை வைத்து முயலை பிடித்து வந்து அன்று  மாலை கோவில் முன்பு  பெண்கள் வெண்பொங்கல்  வைத்து வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், வேடியப்பன், சுவாமிகள் ஊர்வலம் நடைபெற்ற பிறகு பிடித்து வந்த முயலை மக்களின் பார்வைக்கு காண்பித்து அருகில் உள்ள தோட்டத்தில் பாய்ந்தோடும் வகையில் தரையில் விடுவது வழக்கம். 

இந்நிகழ்ச்சி தொடர்பாக கடந்த ஆண்டு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியால் அரூர் வனத்துறையினர் முயலை சித்திரவதை செய்ததாக அந்த கிராமத்திற்கு அபராதம் விதித்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து டிவி மற்றும் பத்திரிக்கையாளர்களை பொதுமக்கள்  முயல் விடும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்காமல் கைகூப்பி வணங்கி திருப்பி அனுப்பி வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies