தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி 4ந் தேதி முதல் அனைத்து நியாயவிலைக்கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பினை பெறாமல் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அதனை வழங்கும் விதமாக இன்று (17.01.2022) பொது விநியோகத்திட்ட நியாயவிலைக்கடைகள் செயல்படும் என அரசு உத்திரவிட்டுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொது விநியோகத்திட்ட நியாயவிலைக்கடைகளில் இன்று (17.01.2022) காலை 7.00 மணி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். இது வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுவிநியோகத்திட்ட நியாயவிலைக் கடைகளுக்கு சென்று அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்
.gif)
