இந்த எருதுவிடும் விழாவில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று எருதுவிடும் விழாவில் விடப்பட்டது. கூட்டத்தில் சீறிக் கொண்டு வரும் காளைகளும் மின்னல் வேகத்தில் வரும் காளைகளும், தூப்பாகி தோட்டாகள் போல சென்ற காளைகளும், துள்ளிக்குதித்து ஓடுவதை பொதுமக்களும் பண்டிகை பார்க்க வந்த பார்வையாளர்களும் கண்டு ரசித்தனர்.
இந்த காளைகளின் கொம்புகளில் பரிசுப் பொருளை கட்டி வேகமாக ஓட விடும் போது பரிசுப்பொருட்களை தட்டவும் இளைஞர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் காளைகளை பிடிக்க முயன்றனர். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்து எழுதிவிடும் பங்கேற்று பண்டிகையை கண்டு ரசித்தனர். இந்த எருது விடும் விழாவில் சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுருந்தனர்.
.gif)
