Type Here to Get Search Results !

தருமபுரி பேருந்து நிலையத்தின் மேற்க்கூரை பெயர்ந்து விழுந்தது.

தருமபுரியின் மையத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையம், தருமபுரி மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையமாக இது விளங்குகிறது பி.ஆர். இராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம், இங்கிருந்து தினமும் இலட்சக்கணக்கான பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து பயணிக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்தில் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது, இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இப்பேருந்து நிலையத்தில் இது இரண்டாவது முறையாக ஏற்படும் சம்பவம் ஆகும். சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து  தமிழகத்தில் உள்ள அணைத்து பள்ளிகளிலும் பழைய மற்றும் இடியும் நிலையில் இருந்த கட்டிடங்கள் அகற்றம் செய்யப்பது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல பொதுமக்கள் அதிகள் கூடும் இடங்களில் உள்ள பழமையான மற்றும் பயன்படுத்தாத கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர், மேலும் தருமபுரி நகரின் புதிய பேருந்து நிலைய திட்டம் இன்னும் ஒப்பந்த அடிப்படையில் இருப்பதை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விரைவில் கட்டுமான பணிகளை துவக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies