இண்டூர் அருகே திப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 33). இவர் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். அடிக்கடி குடும்ப தகராறால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவி செந்தில்நிலா நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்பு வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
வழக்கம் போல காலையில் வீட்டு வேலைகள் செய்யும் செந்தில்நிலா இன்று வெகுநேரமாகியும் இன்னும் வெளியே வராததால் குடும்பத்தினர் அவர் தூங்கிய அறையை சென்று பார்த்துள்ளனர். அப்போது தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது மனைவி செந்தில் நிலா (27). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
.gif)
