கால்நடைகளுக்கு தேவையான வைக்கேல், புற்கள் இல்லாததால் தெருக்களிலும், சாலையோரத்திலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை நாடும் சூழலுக்கு கால்நடைகள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு சாலையோரம் கிடக்கும் குப்பைகளை உண்ணும்போது கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளுக்கு எமனாக மாறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்திருந்தாலும் அவற்றின் பயன்பாடு குறைந்துவிடவில்லை.
தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை கிடங்காக உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் மாடுகளுக்கு உணவாகிறது. இந்நிலையில் குப்பை கழிவுகள் , பிளாஸ்டிகை உண்ணும் கால்நடைகளின் உடல் பல நோய்களுடன் ஆபத்தான நிலமையை சந்திக்கும் .
கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கொடுக்காமல் , போதிய பராமரிப்பு இன்றியும் சாலையிலே கால்நடைகளை மேய்சலுக்கு விடுகின்றனர். தகுந்த பராமரிப்பு இன்றி சாலையிலே விடப்படும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)
