Type Here to Get Search Results !

அரசு கலைக்கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் மீது கலெக்டரிடம் புகார்.

தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசு கலைக்கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் மீது புகார் மனு கலெக்டரிடம் கொடுத்தனர், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அரசு கலைக்கல்லூரி கூடுதல் பொறுப்பு முதல்வர் மீது புகார் மனு தமிழ்நாடு தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா வழங்கினார். 

இதில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் கூடுதல் பொறுப்பு முதல்வரும் தற்போதைய கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியருமான திருமதி பாக்கியமணி அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யக்கோரி வலியுறுத்தப்பட்டது.

இவர் பணியாற்றிய காலங்களில் பல தலித் பேராசிரியர்களுக்கு தொடர்ச்சியாக மெமோ கொடுத்து பணி செய்ய விடாமல் வன்கொடுமை செய்தது, தலித் ஆசிரியர்களுக்கு வர வேண்டிய பண பலன்களை தடுத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியது, லஞ்சம் கொடுக்காத காரணத்தினாலும், தலித் ஆசிரியர் என்ற காரணத்தினாலும், நியாயமாக செலவு செய்த நிதியை கல்லூரி விளையாட்டு நிதியிலிருந்து எடுத்து வழங்காமல்  இவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததை கண்டித்தும், தருமபுரி அரசு கலைக் கல்லூரி புள்ளியியல் துறைத்தலைவர் முனைவர் திருமுருகன் அவர்களுடைய இறப்பிற்கு நீதிவிசாரணை வேண்டும், மேலும் கூடுதல் பொறுப்பு முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் கருப்பையா அவர்கள் பேட்டியின் போது தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது தர்மபுரி மாவட்ட தலித் விடுதலை இயக்க நிர்வாகிகள், பல்வேறு மாணவ அமைப்பினர் கலந்து கொண்டனர். . 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies