Type Here to Get Search Results !

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு குடிநீர் வழங்க பக்தர்கள் கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே தீர்த்தமலையில் அமைந்துள்ள தீர்த்தகிரிமலை மீது எழுந்தருளியுள்ள ராமாயண கால தொடர்புடைய ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு  அடிவார நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து பைப் மூலம் பஞ்சாயத்து நிர்வாகம்  குடிநீர்  வினியோகம் செய்து வருகிறது.

வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த தீர்த்தகிரிஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்பொழுது கரோனா தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் கோவிலை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலம் முடிந்து நாளை புதன்கிழமை கோவில் திறக்கப்பட உள்ள நிலையில்.நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தீர்த்தகிரி மலைக்கு குடிநீர் கொண்டு செல்லும் கேட்வால் உடைந்து உள்ளதால் உடனடியாக அதைச் சீர்செய்து குடிநீர் வினியோகம்  செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies