தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆகம விதிகள்படி கோயில் வளாகத்திலேயே சுவாமி பல்வேறு வாகனங்களில் உற்சவம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று தைப்பூச திரு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது, பின்னர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அலங்கார சேவை நடைபெற்றது, பின்னர் மூலவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்துள்ளது, இதன் காரணமாக தைப்பூசத் திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஏராளமான பக்தர்கள் திரும்பி சென்றனர்.
.gif)
