Type Here to Get Search Results !

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி விழுந்தவர் பலி.

இண்டூர் அருகே சாலையோரம் விழுந்து கிடந்தவர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 45).நேற்று முத்தம்பட்டியில் இருந்து இண்டூர் அருகே ஏரிகோடி கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு  இரு சக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. 

ஏரிக்கோடிக்கு அருகே வரும் போது வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது. இவர் கீழேவிழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நீண்டநேரம் இவர் எழுந்திருக்கவில்லை என்பதால் அக்கம், பக்கத்தினர் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது சுயநினைவின்றி இருந்துள்ளார். 

பின்னர் அவரது குடும்பத்தார்க்கு தகவல் தெரிவித்துதனர். அவர்கள் வந்து ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர், இரவு 10 மணிக்கு மேல் உடல்நீலையில் பிரச்னை ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விபத்து நடந்த பகுதி இண்டூர் போலீஸ் நிலையம் என்பதால் இண்டூர் போலீசார் விசாரணை செய்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies