Type Here to Get Search Results !

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி.

பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

வாக்குச்சாவடி நிலைய அலுவலரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமாகிய மா. பழனி வாக்காளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி வாக்காளர்களுக்கு எடுத்துக்கூறி நம் நாட்டின் ஜனநாயகம் சிறந்து விளங்கிட வாக்காளர்கள் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகள் பற்றி கூறினார்.  வாக்காளர்களின் உறுதிமொழி வாசித்து வந்திருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி அலுவலர் அம்பிகா பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, திலகவதி,அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஊர் பெரியவர்கள் முனுசாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies