Type Here to Get Search Results !

இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய சார் ஆட்சியர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே செம்மனஅள்ளி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட  இருளர் இன குடும்பங்கள்  வசித்து வருகின்றனர், இவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் அடிப்படை தேவைகளான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இல்லாமல் அரசின் சலுகைகளை பெற முடியாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி வருகின்றனர்.

இவர்களின் நலனை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் சர்பில் சிறப்பு முகாம் சார் ஆட்சியர் சித்ரா விஜயன் தலைமையில் நடைப்பெற்றது.

இம்முகாமில் சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த 30க்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு  சாதிசான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இருளர் இன மக்களுக்கு கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 

இம்முகாமில் தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் முருகன், வி.ஏ.ஓ மலர்கொடி, செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies