கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அத்திமுகம் கிராமத்தில் அரசு மேல் நிலைபள்ளி யில் தற்போது மழை பெய்த காரணத்தினால் பள்ளியின் முன் சாலை மிகவும் பழுதடைந்துள்தாகவும் அதனை சரிசெய்து புதிய சாலை அமைத்து தருமாறு PTA தலைவர் மு.ஊரட்சி மன்ற தலைவர் மற்றும் தலைமை ஆசியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர் .
அதனடிப்படையில் நமது ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் வட்டார வளர்ச்சி பொரியாளர்களுடன் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், புதிய சிமெண்ட் சாலை அமைக்கவும் புதிய கல்வெட்டு ஆகியவற்றை அமைக்க ஓரிரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என சூளகிரி ஒன்றிய குழு தலைவர் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி பொரியாளர் தீபாமணி, மு.ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ், பாஸ்கர், ஆனந்த், சலாவுதின், ரகமதுல்லா, பயாஸ், பாபு, மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்
.gif)
