இந்த விழாவில் பொங்கல் பானை வைத்து பொங்கல் செய்து பெண்கள் குலவை சத்தம் போடப்பட்டது எருது மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர் மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்த விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் மற்றும் பைரமங்கலம் ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஸ்ரீனிவாச ரெட்டி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பாரதிய ஜனதா கட்சி கெலமங்கலம் ஒன்றிய தலைவர் மற்றும் ஜக்கேரி ஊராட்சி தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவுக்கு சிறப்பு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் நரேந்திரன் அவர்கள் மற்றும் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த விழா முடிவில்.கெலமங்கலம் ஒன்றியம் துணைத்தலைவர் பாபு அவர்கள் நன்றி கூறினார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட நெசவாளர்கள் பிரிவு பாலகிருஷ்ணன், கோபால்அப்பா, ஒன்றிய துணைத் தலைவர் ஆனந்த் ரெட்டி, பைரமங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆஷா, லதா, பாபு மற்றும் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு ஊர் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
.gif)
