Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த நாள் கொண்டாட்டம்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த தினம் இன்று தருமபுரி கிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி. கே‌.மணி அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு.வெங்க டேஸ்வரன் முன்னிலை வகித்தார். மருத்துவ பணிகள்  உதவி இயக்குநர்கள் இளவரசன் கார்த்திகேயன், கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் தாளாளர் அசோக்குமார், கல்லூரி முதல்வர்  ‌கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன் பிரைமரி பள்ளி தாளாளர் திரு.அருணகிரி,வட்டார நலப்பணிகள் மேற்பார்வையாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திரா மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies