Type Here to Get Search Results !

சங்கமித்ரா நிதி நிறுவனம் திறப்பு விழா.

அரூர் திரு.வி.க நகரில் சங்கமித்ரா நிதி நிறுவனம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், நிதி நிறுவனத்தின் நிறுவனர் புத்தமணி சாக்கரடீஸ் தலைமை வகித்தார். நிதி நிறுவனத்தின் அலுவலகத்தை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து திறந்து வைத்தார். 

இதில், கவிஞர் கீரை பிரபாகரன், அம்பேத்கர் மக்கள் இயக்க மருத்துவர் அணி மாநில செயலர் தணிகைவேல், தலித் சேனா கர்நாடக மாநிலத் தலைவர் ஜிகினி சங்கர், மாவட்டத் தலைவர் மகேந்திர வர்மன், ஆஷியா தங்க நகைக் கடையின் உரிமையாளர் சபீர், தொழிலதிபர் மாலதி ராஜேந்திரன், திமுக தலைமை கழக பேச்சாளர் செந்தாமரைக்கண்ணன், இந்திய கம்யூ.கட்சி மாவட்ட துணைச் செயலர் கா.சி.தமிழ்க்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

மேலும், தொழிலதிபர் வைரன் (மலேசியா), ரவிச்சந்திரன் (மலேசியா), முத்தமிழ்செல்வன் (தென்கொரியா), குரேசன் (சென்னை), முத்தமிழ் (சென்னை), இளங்கோ (விருதாசலம்), வழக்கறிஞர் வேலன் உள்ளிட்டோர் காணொலி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில், மகளிர் சுய உதவிக் குழுவினர் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies