Type Here to Get Search Results !

கடத்தூரில் மின் இணைப்புக்கு ரூ.12 ஆயிரம் லஞ்சம்:மின்வாரிய அலுவலர் கைது.

கடத்தூரில் மின்சார இணைப்பு வழங்க ரூ. 12 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக மின்வாரிய அலுவலர் வேடியப்பன் (39) என்பவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்  கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகேயுள்ள வெதரம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர், கடந்த 2013 ல், விவசாய கிணறுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், இலவச மின்சார இணைப்பு வழங்கிட, கடத்தூர் மின் கோட்ட அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் வேடியப்பன் (39), விவசாயி முருகனிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இது குறித்து விவசாயி முருகன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies