கூட்டத்திற்கு தோழர்கள் மார்க்கண்டன்,குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி மாதையன் கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் பழனி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுப்பட்டியில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும், புதுப்பட்டியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,
நரசிபுரத்திலிருந்து புதுப்பட்டி வரையிலான ஏரி கால்வாயை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதுப்பட்டி ஏ கிளை நிர்வாகிகளாக கிளை செயலாளராக மார்க்கண்டன் துணை செயலாளராக ரமேஷ் கிளை பொருளாளராக ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதுப்பட்டி பி கிளை நிர்வாகிகளாக கிளை செயலாளராக துரை, துணை செயலாளராக குமார்,பொருளாளராக கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்
இதேபோல் கோடல்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில் கிளை நிர்வாகிகளாக கிளை செயலாளராக மாதையன் துணை செயலாளராக நாகராஜ் பொருளாளராக அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.மாதையன் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் பழனி ஆகியோர் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள்.
.gif)
