திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பிளஸ்-2 மாணவி. போச்சம்பள்ளி அருகே உள்ள பாப்பானூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (19). கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் வாலிபர் பிரவீன்குமார், அந்த மாணவியுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்தார். இதில் மாணவி 8 மாத கர்ப்பமானார். இந்த நிலையில் அவரை திருமணம் செய்ய மறுத்ததுடன், மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி சார்பில் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
.gif)
