ஐதராபாத்தில் இருந்து நூல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று வந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது52) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக சிவகுமார் (40) உடன் வந்தார்.
தொப்பூர் கணவாய் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)
