Type Here to Get Search Results !

காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா கருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் வயது 45 மாற்றுத்திறனாளி அவரது மனைவி அம்சலா ஆகியோரை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று லாக்கப்பில் அடித்து பின்பு சேலம் அரசு மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததை கண்டித்து பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழக அரசு மாற்றுத்திறனாளி லாக்கப்பில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும். பிரபாகரன் மீது குடும்பத்தார் மீதும் போடப்பட்ட பொய்யான வழக்கை அனைத்தையும் உடனடியாக வாபஸ் வழங்க கோரியும். பிரபாகரன் வழக்கை கொலை வழக்காக வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவுசெய்யவும்.

மேற்கண்ட இந்த சம்பவம் மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்காத வண்ணம் உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டுமென்றும் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்  பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை வட்டத் தலைவர் அண்ணாமலை. கண்டன உரை மாரிமுத்து மாவட்ட துணைத்தலைவர். சிறப்புரை கரூரான் மாவட்ட செயலாளர். மாவட்ட தலைவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ராமச்சந்திரன். மற்றும் மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies