Type Here to Get Search Results !

மின் கசிவு காரணமாக வீடு எரிந்து நாசம்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருகில் உள்ள வடக்கு தெரு கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 62). இவரது மனைவி பூங்கோதை(55).

இவர்களது வீட்டில் நேற்று இரவு 8.30 மணியளவில் மின்சார கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தருமபுரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் இல்லை. இதுபற்றி தகவலறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவம் இடத்தில் விசாரணை நடத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies