Type Here to Get Search Results !

அதிமுக ஆட்சியில் தரமில்லாத நெல் கொள்முதல் செய்து அரிசி விநியோகம் ஒப்பந்ததாரர் பாஸ்கர் குற்றச்சாட்டு.

தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் குற்றச்சாட்டு.

 அதிமுக ஆட்சிக்காலத்தில் தரமில்லாத நெல் கொள்முதல் செய்து மக்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டது என்று தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளரும், தர்மபுரி மாவட்ட மொத்த புளி வணிகர்கள் சங்க நிறுவனத்தலைவருமான பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் திமுக ஆதரவு நிலையெடுத்து திமுக வேட்பாளர் வெற்றிக்காக உழைத்துள்ளேன். கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு நான் திமுகவின் விசுவாசியாக பணியாற்றி வருகிறேன். 2 ஆயிரம் பேருடன் கடந்த 3ம் தேதி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்வதற்கு தர்மபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முதல்வர் நிகழ்ச்சி தேதி ஒத்திவைக்கப்பட்டது. எனக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பு கிடையாது.

கல்விப்பணி, அரசியல் பணி, புளி தொழில், நெல் அரவை, காண்ட்ராக்ட் தொழில்கள் செய்து வருவதால் என் மீது காழ்புணர்ச்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு தொடர்புபடுத்தி எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனுக்கும், எனக்கும் தொழில் மற்றும் அரசியல் ரீதியான தொடர்பும் கிடையாது. அவர் எனக்கு இடையூறு தான் செய்து வந்தார்.  கடந்த அதிமுக ஆட்சியில் தரமில்லாத நெல் கொள்முதல் செய்து புழுத்த அரிசி விநியோகம் செய்யப்படட்து..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies