Type Here to Get Search Results !

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது, அதில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது அதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள விவரங்களை வெளியிட்டுள்ளது. 

1. பேரூராட்சிகள்.

தருமபுரி மாவட்டம் : பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி, பி. மல்லாபுரம் பேரூராட்சிகளுக்கு - பட்டியல் இனம் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.

பாப்பாரப்பட்டி பேரூராட்சி மற்றும் அரூர் பேரூராட்சி - பொது பிரிவு (பெண்கள்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் : காவேரிப்பட்டினம் பேரூராட்சி - பெண்கள் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.

2. நகராட்சி தேர்தல்.

தருமபுரி மாவட்டம் - தருமபுரி நகராட்சி - பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் : கிருஷ்ணகிரி - பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies