Type Here to Get Search Results !

3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கோவில்; நிர்வகிப்பதில் போட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த தாசனபுரம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது ஸ்ரீ லஷ்மி வெங்கடராமன சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சிறிய அளவில் இருந்த இக்கோவிலை இதே கிராமத்தை சேர்ந்தை சேர்ந்த (விசிக மாவட்ட அமைப்பாளர்) சம்பங்கி ராமைய்யா நாயுடு என்பவர் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் சொந்த செலவில் 3கோடி ரூபாயில் 2016ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் கட்டிமுடிக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைப்பெற்று வந்தது.

தர்மகர்த்தாவிற்கும் கோவில் அர்ச்சகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், அர்ச்சகர் சம்பங்கி ராம நாயுடுவிற்கும் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே இது விவாதமாக மாறிய நிலையில் தர்மக்கர்த்தா சம்பங்கிராம நாயுடு, பேரிகை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரண்டு தரப்பையும் போலிசார் விசாரணைக்காக அழைத்தனர்.

இதில் பங்கேற்க பல கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் குவிந்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியது, போலிசார் மத்தியில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தாசனபுரம் கிராம கோவிலில் பேசி தீர்த்துக்கொள்ள முடிவு செய்து கலைந்து சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies