இந்திய விடுதலை போராட்டத்தை முதன் முதலில் முன்னெடுத்த தமிழர்களின் வீர வரலாற்றை மறைக்கும் முகமாக ஒன்றிய அரசு இந்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆகியோர் உருவம் பொறித்த வாகனம் தகுதியற்றது என ஒன்றிய அரசு மறுத்துவிட்டது.
இத்தகைய மத்திய அரசின் தமிழக விரோத செயலை கண்டித்து இன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் விஜயபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி. மாதையன் கண்டன உரையாற்றினார்.
இதில் வட்டார செயலாளர் பி. முனியப்பன், துணை செயலாளர் பி.சம்பத், நகர துணை செயலாளர் இல. தர்மராஜா, மாவட்ட குழு உறுப்பினர் கவுன்சிலர் நாகராஜ், வட்டார குழு உறுப்பினர்கள் சண்முகம், கோவிந்தராஜ், முனுசாமி, மூர்த்தி, உள்ளிட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இறுதியில் நகர துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
.gif)
