Type Here to Get Search Results !

இலவச மனைப்பட்டாகேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

கடத்தூர் அடுத்த போசிநாயக்கனஅள்ளி கிராமம் உள்பட 8 கிராமங்களில் வீட்டு மனைப்பட்டா இல்லாத குடியிருப்புகளுக்கு இலவச மனைப்பட்டா வேண்டும் என வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தருமபுரி மாவட்டம் கடத்தூர்  ஒன்றியம் ஒசஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட போசிநாயக்கனஅள்ளி, ஒசஅள்ளி, வேடியூர், பாசாரப்பட்டி உள்ளிட்ட 8 குக்கிராமங்களில் சுமார் 1150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காடு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி போசிநாய்கனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சுவார்ததை நடத்தி தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகான நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என கோஷமிட்டு முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies