இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் திரு.மிட்டல் அவர்கள் தெரிவித்ததாவது: எருது விடும் விழாவில் உள்ளுர் மாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. எருது விடும் திருவிழா நடத்தும் விழா குழுவினர் எருதுகளுக்கு என்று தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது. இந்த எருது ஓட்டம் 3.30 மணி நேரத்திற்கு மட்டுமே நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது. எருது ஓட்டம் 125 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும். மேற்கண்ட எருதுகள் ஓடுமிடத்திற்கு இருபக்கத்திலும் இரட்டை அடுக்கு தடுப்பு அரண் அமைக்கப்பட வேண்டும்.
ஓவ்வொரு பக்கங்களிலும் இரு தடுப்பு அரண்களுக்கு இடையில் 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். இத்தடுப்பு அரண் 200 மீ தூரத்திற்கு இருபக்கமும் அமைக்கப்பட்டு அதில் 125 மீ தூரம் மட்டுமே பந்தய தூரமாக இருந்திட வேண்டும். மேற்படி குழுவின் அறிக்கையில் எத்தனை காளைகள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளது என்பதை தெளிவாக விழா பொறுப்பாளர்களிடமிருந்து எழுத்து பூர்வமாக பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இக்குழு கீழ்க்கண்ட விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
பார்வையாளர்களை மேற்கண்ட பாதுகாப்பு அரணின் 150 மீ தூரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதற்குமேல் சிறு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு அரணின் இரு பக்கமும் காவலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். காளைகளின் உரிமையாளர்கள் 200 மீ தூரத்திற்கு அப்பால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இத்தடுப்பு அரண்களின் உறுதித் தன்மையை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப (வுழவயட உயியஉவைல) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பார்வையாளர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (சுவு‐Pஊசு வுநளவ) என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பந்தய தூரம் முடிவடையும் 125 மீ தூரத்தில் பந்தயப் பகுதியில் எவ்வித தனிநபரோ, பார்வையாளரோ இருந்திடக் கூடாது. மேலும் பார்வையாளர்கள் காளைகளை அடித்தலோ (அ) துன்புறுத்தலோ செய்தல் கூடாது. எருது விடும் பந்தயத்தில் உள்;ரைச் சேர்ந்த காளைகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். இப்பந்தயத்தில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்களின் பெயர், முகவரி, அவர்களது ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றினை விழா குழுவினரிடமிருந்து பெற்று தணிக்கை குழு மாவட்ட ஆட்சியருக்கு அளித்திடல் வேண்டும். போட்டி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
மேலும் அடையாள அட்டை இல்லாத வீரர்கள் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். காளைகளுக்கு கட்டப்படும் கயிறுகள் 10 அடி முதல் 15 அடி நீளம் வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு கயிறு மட்டுமே கட்டப்பட வேண்டும். போட்டி நடத்துமிடத்தில் காளைகள் ஓய்வு எடுக்கும் அறை, காளைகளை பரிசோதிக்கும் அறை ஆகியன தனித்தனியாக அமைத்திட வேண்டும். போட்டி முடியுமிடத்தில் அதாவது 200 மீ தூரம் தாண்டி காளைகளை பரிசோதிக்க தனியாக இடம் ஒதுக்கிட வேண்டும்.
காளைகள் ஒவ்வொன்றும் கால்நடை மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்று வழங்கப்பட்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். பந்தயம் துவங்குமிடத்திலும், முடியும் இடத்திலும் தலா ஓரு மருத்துவக்குழுவினர் பணியமர்த்தப்பட வேண்டும். பட்டியலில் உள்ள நபர்களின் காளைகளை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். காளைகளின் பந்தயத் தூரம் நேர்கோடாக இருக்க வேண்டும், வளைவுகளோ அல்லது சுற்றுகளோ இருப்பதாக அமைக்கக் கூடாது. பந்தயத்தினை தேசிய நெடுஞ்சாலை (அ) மாநில நெடுஞ்சாலைகளில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
விதிமுறைகளை மீறும்பட்சத்தில் போட்டி உடனடியாக நிறுத்தப்படும். எருது ஓட்டம் நடைபெறும் சாலை இடைவெளி 12 அடி மட்டுமே இருக்க வேண்டும். மாடு ஓடும் பாதையில் பொதுமக்கள் யாரும் இருக்க கூடாது. போட்டியில் பங்கேற்கும் காளைகளின் வயது குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதற்கு குறைவான வயது உடைய காளைகளை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. இதனை கால்நடை பராமரிப்புத்துறையினர் உறுதி செய்திட வேண்டும்.
போட்டி நடைபெறும் இடங்களில் குறைந்த பட்சம் இரண்டு 108 அவசர ஊர்திகள் பணியமர்த்தப்பட வேண்டும். மேலும் போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்ட (அ) மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஓர் மருத்துவக்குழு பணியில் இருந்திட வேண்டும். இவ்விழாவில் அரசால் தடை செய்யப்பட்ட எந்தவித பணம், பரிசு பொருளாக வழங்கக்கூடாது. காளைகளுக்கு தண்ணீர்;, பூசா, புல் ஆகியவற்றை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும். காளைகளை சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று விழா நடைபெறும் இடத்தில் மருத்துவ குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும், எருதுவிடும் நிகழ்ச்சிகளை முழுமையாக காப்பீடு செய்ய வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியினை முழுமையாக வீடியோ பதிவு செய்து அதன் நகல் ஒன்றினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகள்:- எருது விடும் நிகழ்ச்சிக்கு ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.
மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியில் பங்கு பெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும். எருதுவிடும் நிகழ்ச்சியில் பங்குபெறும் வீரர்களுக்கு, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
எருதுவிடும் நிகழ்ச்சியை நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர்களும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் தமிழக விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் மரு.ஐயூப்கான், மரு.ஷோபா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கோ.மலர்விழி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மரு.இராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் (கிருஷ்ணகிரி) திரு.சத்தீஸ்குமார், (ஓசூர்) திருமதி. தேன்மொழி, கால்நடை துணை இயக்குநர் மரு.மரியசுந்தர், உதவி இயக்குநர் மரு.முரளிசதானந்தம், மருத்துவர்கள் திரு.பிரேம்குமார், திரு.ராஜேஷ், திருமதி.சிவசங்கரி, தனி வட்டாட்சியர்கள் திரு.வெங்கடேஷ், திரு.சண்முகம், தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை மற்றும் எருதுவிடும் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
.gif)
