Type Here to Get Search Results !

மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பென்னாகரத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பாக  கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை ஏற்றார், செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜுனன், விசுவநாதன், வி.ரவி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்பாட்டத்தின் நோக்கமான பென்னாகரம் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தை 24 மணி நேரம் செயல்படுத்த வேண்டும் மற்றும் இரத்த வங்கி C.T Scan செயல்பாடுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பல்வேறு  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன  இறுதியாக முதுபெரும் தோழர் பி.இளம்பரிதி அவர்கள் நிறைவுரை ஆற்றினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies