Type Here to Get Search Results !

அரூர் கச்சேரிமேட்டில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்.

அரூரில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது, நேரு யுவகேந்திரா சார்பில் அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாமில், அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் தலைமை வகித்தார். கரோனா தடுப்பூசிகளை செலுத்துதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பினால் நன்றாக கழுவ வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களை நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதில் அதிமுக  ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, நகர செயலாளர் பாபு(எ)அறிவழகன், கூட்டுறவு சங்க தலைவர் சிவன் ஒன்றிய குழு துணை தலைவர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies