கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஏனுசோனை அருகே பீ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வற்றிய கிணற்றில் அப்பகுதியினரால் வளர்க்கப்படும் நாய் கிணற்றில் தவறி விழுந்தது.
பீ.கொத்தப்பள்ளி அருகே ராஜாமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 30 அடி வற்றிய கிணறு உள்ள நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் வசிக்கும் நாய் ஒன்று கிணற்றில் தவறி விழுந்தாக கூறப்படுகிறது.
கிணற்றில் விழுந்த நாயை மீட்க கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மீட்கப்பட்ட நாயை அப்பகுதியினர் உணவளித்து பாசத்துடன் கவனித்து வருகின்றனர்.
.gif)
