Type Here to Get Search Results !

குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்.

அரூர் அருகே குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் காலி குடங்களுடன்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அரூர் ஊராட்சி ஒன்றியம், கே.வேட்ரப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது எச்.ஈச்சம்பாடி கிராமம். இந்த ஊரில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது, பழுதான காரணத்தால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. 

எச்.ஈச்சம்பாடியில் இடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பதிலாக புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏதும் கட்டப்படவில்லை. இதனால், இங்குள்ள கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் நாள்தோறும் அவதியுறுகின்றனர். இது குறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை வழங்கியும் நடவடிக்கை இல்லையாம். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருவதுடன், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் எச்.ஈச்சம்பாடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies