தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் தென்கரைக்கோட்டை வருவாய் கிராமத்தில் அரசு பொது விநியோக கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கவசங்கள் அணியாமலும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் தங்களது பொருட்களை வாங்க குவிந்தனர் .
மேலும் இங்கு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு வழங்கிய, பொங்கல் பரிசு கான தொகுப்பு இல்லாமல், கட்டைப் பை, மற்றும் சாக்குப் பையுடன் வந்து பொதுமக்கள் பொங்கல் பரிசினை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டபோது எங்களுக்கு மேலதிகாரியிடம் இருந்து பொங்கல் தொகுப்பு பை இன்னும் வரவில்லை அதனால் நாங்கள் அப்படியே விநியோகிக்க உத்தரவிட்டுள்ளனர் என்று பதிலளித்துள்ளார் .
மேலும் சமூக இடைவெளியை பறக்கவிட்டு முண்டியடுத்துக்கொண்டு மக்கள் பொங்கல் சிறப்பு தொகுப்பினை பெற்றுச்சென்றனர், மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பொதுமக்கள் பின்பற்ற அரசு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.gif)
