கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், புதிய ஒமிக்ரான் பரவலாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் செலுத்தும்போது, அவர்களுக்கு தொற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்பது மருத்துவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 91 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முதல் தவணை தடுப்பூசியும், 66 சதவீதத்தினர் இரு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். இன்னும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது, தொற்றினால் பாதிக்கப்படுதல் மற்றும் அதன் தீவிரத்தன்மையை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்களப்பணியாளர்களுக்கு (முன்னெச்சரிக்கை கொரோனா தடுப்பூசி) மூன்றாம் தவணை செலுத்தும் பணிகள் நடைப்பெற்று. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி கொரோனா தடுப்பூசி மையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் அரசு பொதுநல மருத்துவர் வெண்ணிலா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்,
.gif)
