Type Here to Get Search Results !

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் - முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் குற்றச்சாட்டு.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் வகையில் ரெய்டு என்கிற பெயரில் நாடகமாடி வருகிறார் என முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பேட்டி

தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீடு மற்றும் உறவினர் ஆதரவாளர்கள் வீடுகள் கடைகளில் இன்று லஞ்ச ஒழிப்புதுறையினர் 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெறும் இடத்தில் ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர். அதே போல் அதிமுக நிர்வாகிகளும் வந்துள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ரெய்டு நடைபெறும் இடத்திற்கு வந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்: நடைபெறும்  கோடிக்கணக்கான லஞ்சத்தின் மூலம் பொய் பிரச்சாரங்களை ஏவிவிட்டு மீடியாக்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை சொன்னாரோ அதை நிறைவேற்றவில்லை. பொங்கல் நாளில் பொங்கல் பரிசாக 5000 ரூபாய் அறிவித்தார், வரும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு ரூபாய் கூட தரவில்லை. 

பொங்கல் தொகுப்பு பரிசாக குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார் அதையும் தரவில்லை, கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்று சொன்னார் எதையுமே செய்யவில்லை. செய்யவில்லை என்பதைவிட மொத்தத்தில் அவர் எதையுமே செய்யவில்லை குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள தூள் செட்டி  ஏரியில் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று சொல்லி நேரிலேயே சென்று கூட்டம் போட்டு நாடகமாடினார். ஆக இவையெல்லாம் மறைப்பதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செல்வாக்கு உயர்ந்திருக்கிறது, அதிமுகவினர் சொன்னதை செய்தார்கள். 

இப்படி பொய்யானவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற காரணத்தால் அதை மூடி மறைப்பதற்காக திசை திருப்புவதற்காக பொங்கல் நாளில் ஒவ்வொருவரும் எங்கே ஆயிரம், எங்கே தரமான பொருட்கள், கல்விக் கடன் தொகை, எங்கே நகை கடன் தள்ளுபடி செய்தார் என்று கேள்வி கேட்க ஆரம்பித்த காரணத்தால் இதை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைவர்களை குறிவைத்து தாக்குகின்றனர். 

லஞ்ச ஒழிப்பு சோதனை என்கிற பெயரால் இந்த அடக்குமுறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அடக்குமுறையின் மூலம் மக்களை திசை திருப்புவதற்காக ஒரு நாடகம்தான் ஸ்டாலின் இப்போது நடத்திக்கொண்டிருக்கிறார்.

நாடகம் நடத்துவதில் பொய் பிரச்சாரம் செய்து கோயாபல்ஸ்யே மிஞ்சுவிட்டார் ஸ்டாலின். ஆயிரம் ஆயிரம் சோதனைகள் வந்தாலும் அதை சந்திக்க ஆற்றலும் துணிவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு என்பதை இன்றைக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் அடக்குமுறைகளை  கொண்டுவந்தாலும் இந்த கழகத்தை, இந்த அமைப்பை, தொண்டர்களின் உணர்வுகளைப் என்றைக்கும் புறந்தள்ளிவிட முடியாது. அதை அழித்துவிட முடியாது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். தொண்டர்கள் எத்தனை அடக்குமுறைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பெயரால் கழகத்தின் மீதும் கழகத் தலைவர் மீது சுமத்தப்படுகிறது கழகங்கள் நீதிமன்றத்தின் மூலம் உருவாக்கப்படும். 

இப்படிப்பட்ட அராஜகத்தை அடக்குமுறையை பழிவாங்கும் அரசியலை தமிழர் திருநாளாகிய பொங்கல் நாளில் கூட விட்டு வைக்காமல் செய்கிறார். இது நியாயம் தானா என்பதை தமிழனாக இருந்தால் எப்படி பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என முன்னால் அமைச்சர் முல்லை வேந்தன் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies