தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா,மோப்பிரிபட்டி கிராமத்தைச் சார்ந்த சண்முகம் மகன்கள் செல்வம், செல்லக்கண்ணு தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் தாயார் ஜெயா உடன் செல்லக்கண்ணு வசித்து வருகிறார். அதன் அருகில் அவரது சித்தப்பா சிவக்குமார், முருகேசனும் இருவரும் வசித்து வருகின்றனர். செல்வம் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதால் அங்கேயே தங்கி வருகிறார்.
இந்நிலையில் சிவகுமாருக்கும் செல்லகண்ணனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குவாதம் முற்றி கைகலப்பு நடைபெற்று, மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்த சிவக்குமார், முருகேசன் இருவரும் சேர்ந்து செல்லகண்ணனை தாக்கியதில் பயத்தில் தனது வீட்டிள் ஓடிய கதவை மூடி கொண்டாராம்.
வீட்டில் கதவை உடைத்து கையில் இருந்த இரும்பு ராடால் சிவக்குமார், முருகேசன் இருவரும் மாறி, மாறி தாக்கியதில் செல்லகண்ணன்(37) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகேசன் சிவகுமார் இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
.gif)
