Type Here to Get Search Results !

பள்ளி கட்டிடம் இடிப்பு தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் கணவருக்கும் ஒன்றிய கவுன்சிலருக்கும் வாக்குவாதம் பீடிஓ சமரச பேச்சு.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணியம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டிடம் ஒன்றிய புதிய பொது நிதியிலிருந்து இடிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கப்பட்டது, இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் திலகாசிலம்பரசன் கட்டிடத்தை ஜேசிபி எந்திரம்  மூலம் நேற்று முன்தினம் இடித்தனர், இந்த நிலையில் மணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா அவரது கணவர் சரவணன், எனக்கு தெரியாமல் பள்ளி கட்டிடத்தை யார் இடித்தது? என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதனைத் தொடர்ந்து கவுன்சில் சார்பில் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.  

கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா மற்றும் மேற்பார்வையாளர் அன்னபூரணி, சேர்மேன் உதயா, துனைசேர்மேன் சத்திவேல் ஒன்றிய குழு உறுப்பினர் இராணிஅம்பேத்கார் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர் ஆய்விற்கு பின்பு பணி செய்யலாம் என வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies