கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள காரகுப்பம் கிராமத்தில் கடந்த மாதம் புதிதாக பிரசவித்த கங்கை அம்மன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து கடந்த 47 நாட்களாக தினந்தோறும் சிறப்பு பூஜைகளும் அலங்காரம், அபிஷேகங்களும், விஷேமாக செய்யப்பட்டு தினம் தினம் பக்தர்களுக்கு கங்கையம்மன் காட்சியளித்தார்.
இதையடுத்து நேற்று கடைசி தினமாக 48 நாள் மண்டல பூஜை நிறைவடைந்து கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்து சிறப்பாக நடைபெற்றது. இந்த மண்டல பூஜையில் கடவரப்பள்ளி கத்திரிப்பள்ளி, நாச்சிகுப்பம், திம்மசந்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த கோவிலுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
.gif)
